இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நிலைமை தொடர்பான அனைத்து மீளாய்வுகளும் நிறைவடைந்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பான அறிக்கை அமைச்சரவையில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் நேற்று விசேட அறிக்கையொன்றை விடுத்த பிரதமர், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி என்பனவற்றுடன் உதவித்தொகையை அதிகரிப்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



