பாரிய இன்னல்களை எதிர்நோக்கி வரும் கடற்தொழிலாளர்கள்.

0

வங்கக்கடலில் தற்போது ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாகக் கடல் அலையில் உயரமும் வேகமும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் அம்பாறை மாவட்டத்தில் கடற்தொழிலாளர்கள் பாரிய இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர்.

அத்துடன் தாழ் அமுக்கம் காரணமாகக் கடல் அலை வழமைக்கு மாறாக முன்னோக்கி வந்துள்ளமையால் கடற்தொழிலாளர்கள் கடலுக்குச் செல்லாமல் தங்களது உடைமைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் இன்று ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கடற்தொழிலாளர்களின் தங்குமிடம் மற்றும் பொதுமக்கள் ஒன்றுகூடும் பகுதிகளைக் கடல் அலைகள் சூழ்ந்துள்ளதுடன், போக்குவரத்து மேற்கொள்ளும் பாதைக்கு அருகாமையில் கடலலை வந்துள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Leave a Reply