இதுவரை சந்திக்காத அளவு நோயாளிகளின் உயிருக்கு பெரும் ஆபத்து.

0

இலங்கையில் தற்போது மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இந்நிலையில் நாட்டில் காணப்படும் பல மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை, அவசர சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சைக்கு தேவையான மருந்துகள், இரசாயனங்கள் பற்றாக்குறையால் பல நோயாளிகள் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அத்துடன் பல மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இது தொடர்பில் தங்களுக்கு அறிவித்துள்ளதாக கூட்டணியின் தலைவர் மருத்துவர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் மருத்துவமனைகளில் மருந்துகள் மற்றும் சத்திர சிகிச்சை உபகரணங்களின் பற்றாக்குறை தீவிரமடையும்

மேலும் இதுவரை சந்திக்காத அளவு நோயாளிகளின் உயிருக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். ஒரு முக்கியமான கட்டத்தில் சுகாதாரத் துறையை நிறுத்தும் என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தால் வீரசிங்க எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply