இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் காவல்துறை மா அதிபர் சி.டீ விக்ரமரத்ன ஆகிய இரு நபர்களையும் உடனடியாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த இருவரையும் இன்று முற்பகல் 10 மணிக்கு மனித உரிமை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் நேற்று முன்தினம் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக குறித்த இருவரையும் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



