பிரபல நடிகருடன் இணையும் கீர்த்தி சுரேஷ்.

0

தெலுங்கில் கீர்த்தி சுரேஷிற்கு இப்போது அதிர்ஷ்ட காற்று வீசும் காலம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது மகேஷ் பாபுவுடன் சர்க்காரி வாரு பாட்டா நடித்து வெளியாக இருக்கிறது.

அத்துடன் ஷங்கர் இயக்கி வரும் ராம் சரணின் 15வது படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் மகிழ்ச்சியில் இருக்கிறார் கீர்த்தி சுரேஷ். ஏற்கனவே சாணிக்காயிதம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தைக் கவர்ந்துள்ளது.

ஷங்கர் படத்தின் கதையும் லேசாக வெளிவந்திருக்கிறது

. கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதி, தேர்தல் ஆணையத்தை மையமாக வைத்து உருவாகிவரும் இப்படம், ஆக்‌ஷன் பொலிடிக்கல் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டு வருகிறதாம்.

ஷங்கர்-ராம் சரண் கூட்டணியில் உருவாகும் இப்படத்தில் ராம்சரணுக்கு இரு கதாப்பாத்திரங்கள்.

அதில் ஒன்றில், கிராமத்து விவசாயியாக அவர் நடிக்கிறாராம்.

கதையில் இரு நாயகர்கள் இருப்பதால்தான் கியாரா அத்வானியுடன் கீர்த்தி சுரேசும் தற்போது சேர்ந்திருக்கிறார்.

Leave a Reply