கன்னியருக்கு மனம்போல மாங்கல்யம் கிடைக்க ஸ்லோகம்

0


அஸ்மாத்ருசா மபக்ருதௌ சிரக்ஷிதாநாம்
அஹ்நாய தேவி தயதே யதஸௌ முகுந்த:
தந்நிச்சிதம் நியமிதஸ் தவ மௌளிதாம்நா
தந்த்ரி நிநாத மதுர: ச கிராம் நிகும்பை:
கோதா ஸ்துதி


பொதுப்பொருள்:

ஆண்டாள் தேவியே, உனக்கு வந்தனம். சாத்திரங்கள் அனுமதிக்காத பாகவத அபசாரங்கள் பலவற்றை நெடுங்காலமாக நாங்கள் செய்து வருகிறோம். ஆனாலும் எங்களுக்கெல்லாம் தங்கள் கணவரான அரங்கத்துப் பெருமாள் திருவருள் புரிகிறார். தவறு செய்யும் எங்களுக்கும் பெருமாள் அருளும் காரணம் என்னவாக இருக்கும்? அது, நீ சூடிக் கொடுத்த பூமாலையால் அவர் வசப்பட்டிருப்பதால்தான். அது மட்டுமல்லாமல் வீணையின் நாதம் போன்ற உன் குரலால் தீந்தமிழில் பிரபந்தமும் பாடித் துதித்திருக்கிறாய். அதனாலேயே உன் குழந்தைகளாகிய எங்களை பெருமாள் தண்டிக்காமல் விட்டிருக்கிறார். அதற்காக ஆண்டாள் தேவியே உனக்கு மீண்டும் வந்தனம். – Source: dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply