2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை மே மாதம் 23ஆம் திகதி முதல் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்நிலையில் பரீட்சை அனுமதி அட்டைகள், எதிர்வரும் 12ம் திகதிக்கு முன்னர் கிடைக்கப்பெறாத பரீட்சார்த்திகள் பரீட்சைகள் திணைக்களத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பரீட்சார்த்திகளின் பரீட்சை அனுமதி அட்டைகள் மற்றும் பரீட்சை அட்டவணைகள் சம்பந்தப்பட்ட பாடசாலை முதல்வர்களுக்கும், தனிநபர் பரீட்சார்த்திகளின் பரீட்சை அனுமதிப் பத்திரங்கள் தத்தமது விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, இம் மாதம் 12ஆம் திகதிக்கு முன்னர் பரீட்சை அனுமதி அட்டைகள் கிடைக்கப்பெறாத பாடசாலைகள் மற்றும் தனிநபர் பரீட்சார்த்திகள் , பரீட்சைத் திணைக்களத்தின் கீழே தரப்பட்டுள்ள தொலைபேசி விளக்கங்களுக்கு அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
அதாவது 011-2784208,011278453,011-3140314அல்லது 1911என்ற இலக்கங்களுக்கு தொடர்புகொண்டு மேலதிக விவரங்கள் பெற்றுக் கொள்ளுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.



