இலங்கையில் உடன் அமுலுக்கு வரும் வகையில் அவசரகால நிலை பிரகடனம்.

0

இலங்கையில் உடன் அமுலுக்கு வரும் வகையில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ வினால் குறித்த அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

அத்துடன் குறித்த விடயம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையில் மக்கள் அவசரகால நிலைமை நிலவுவதன் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியை பாதுகாத்தல், பொது மக்கள் வாழ்க்கைக்கு அத்தியாவசியமான வழங்கள் மற்றும் சேவைகள் என்பவற்றை பேணுவதற்காக குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது..

Leave a Reply