கேரள மாநிலம் காசர்கோட்டில் துரித உணவுக் கடை ஒன்றில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 16 வயது பள்ளி மாணவி தேவநந்தா என்பவர் உயிரிழந்தார்.
பலர் ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள ஒரு ஓட்டலில் கெட்டு போன பிரியாணி சாப்பிட்ட 30-க்கும் மேற்பட்டோர் உடல் ஒவ்வாமை ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது தஞ்சை மாவட்டத்தில் ஷவர்மா சாப்பிட்ட 3 கல்லூரி மாணவர்கள் வாந்திமயக்கம் ஏற்பட்டு பாதிப்புக்குள்ளானது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் அரசு கால்நடை மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் ஏராளமான மாணவமாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்தக் கல்லூரியில் கன்னியாகுமரியை சேர்ந்த பிரவீன் (வயது 22), புதுக்கோட்டையைச் சேர்ந்த பரிமலேஸ்வரன் (21), தர்மபுரியை சேர்ந்த மணிகண்டன் (22) ஆகியோர் விடுதியில் தங்கியிருந்து படித்து வருகின்றனர்.



