நாட்டில் தற்போது எரிபொருளுக்கு தட்டுப்பாடு நிலவிவருகின்றது.
இந்நிலையில் டீசல் விநியோகத்தில் சற்று தாமதம் ஏற்படலாம் என வலுசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பெட்ரோல் விநியோகம் மூன்று நாட்களுக்குள் சீராகும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.



