இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய இந்தியா நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்நிலையில் இந்தியா வழங்கிய ஒரு பில்லியன் டொலரில் , இரும்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அத்துடன் 250 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள 750 மில்லியன் டொலர்களில், இந்தியாவில் இருந்து இரும்பு மற்றும் உருக்கை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் இலங்கையின் சந்தையில் அத்தியவசிய உணவுப் பொருட்கள், சமையல் எரிவாயு, எரிபொருள் உள்ளிட்டவற்றுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவும்நிலையில் இரும்பு இறக்குமதி செய்யப்படுகின்றமை தொடர்பாக பொருளாதார நிபுணர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர்.



