புதிய மாநில நிர்வாகிகள் தேர்வில் பா.ஜனதா தீவிரம்.

0

தமிழக பா.ஜனதாவில் 59 மாவட்ட தலைவர்கள் பட்டியலை நேற்று முன்தினம் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டார்.

சரியாக செயல்படாத 26 மாவட்ட தலைவர்களின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக புதிய மாவட்ட தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள்.

அடுத்த கட்டமாக மாநில நிர்வாகிகள் தேர்வில் பா.ஜனதா தீவிரம் காட்டி வருகிறது.

பொதுச்செயலாளர், துணைத் தலைவர், இளைஞர் அணி தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர்.

மாநில நிர்வாகிகள் பதவியிலும் ஏற்கனவே பதவியில் இருந்து சரியாக செயல்படாதவர்களை மாற்றிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமிக்க அண்ணாமலை திட்டமிட்டுள்ளார்.

இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு அண்ணாமலை நாளை தமிழகம் திரும்புகிறார். அவர் வந்ததும் இந்த பட்டியல் உறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்படும்.

மேலும் புதிய நிர்வாகிகள் நியமனம் முடிந்த பிறகு அண்ணாமலையின் அரசியல் இன்னும் வேகம் எடுக்கும் என்று கட்சி நிர்வாகிகள் கூறினார்கள்.

Leave a Reply