நாட்டின் பொருளாதாரம் முற்றாக வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்நிலையில் இலங்கையில் இலட்சக்கணக்கானோர் தொழில்களை இழக்கும் நிலைமை ஏற்படலாம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் வங்கிகளும் வீழ்ச்சியடையும் அபாயம் காணப்படுவதாகவும், இதனை பாதுகாப்பதற்கு தேவையான வேலைத்திட்டங்களை தாமதிக்காது முன்னெடுக்க வேண்டும் என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், எமது வங்கிகளில் இருப்புகள் இருக்குமாக இருந்தால் உண்மையில் அவற்றின் தற்போதைய பெறுமதி 50 வீதமானதாகவே இருக்கும்.
மேலும் ஊழியர் சேமலாப நிதி மற்றும் நம்பிக்கை நிதி இருக்குமாக இருந்தால் அவற்றின் பெறுமதியும் 50 வீதமே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



