முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தேனியில் 11,000 பேர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள்.

0

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டு மதுரையை வந்தடைந்துள்ளார்.

அவருக்கு மதுரை விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

விமான ஓடுபாதையில் இருந்து கார் மூலம் சிறப்பு பாதையில் வெளியே வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு போலீசார் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.

அத்துடன் வழி நெடுக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் வரவேற்பு அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து அவர் தேனி வைகை அணையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

அதன் பின்னர் தேனி அன்னஞ்சி பிரிவு அருகே பைபாஸ் ரோட்டில் தனியார் மில் அருகே நடந்த விழாவில் 11,000 பேர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

மேலும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.

முன்னதாக ஆண்டிப்பட்டியில் உள்ள போலீஸ் குடியிருப்புக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வேனை நிறுத்தச் சொல்லி குடியிருப்புக்குள் இருந்த பொதுமக்களை சந்தித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply