நாட்டில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடி நிலைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
இந்நிலையில் காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று 19 நாளாகவும் தொடர்ந்து செல்கின்றது.
அத்துடன் கடந்த தினங்களில் காலிமுகத்திடல் போராட்டத்தில் பாரிய அளவிலான மக்கள் இணைந்திருந்தனர்.
குறித்த பகுதியில் கூடியிருந்த மக்கள் நேற்றிரவு பேபர்பேக் காடுகளின் ஊடாக தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
மேலும் தற்போதைய நெருக்கடி நிலை அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி இன்று கண்டியில் இருந்து கொழும்பு வரை ஆர்ப்பாட்ட பேரணியொன்றை ஆரம்பிக்கவுள்ளது.



