கொழும்பின் பல பகுதிகளிலும் குவிக்கப்படும் இராணுவத்தினர்.

0

கொழும்பின் பல பகுதிகளிலும் பாதுகாப்புப் பணிகளுக்காக அதிகளவான படையினர் பேருந்துகளின் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதற்கமைய கொழும்பில் இன்று இடம்பெறும் அரசாங்கத்துக்கு எதிரான பல்வேறு ஆர்ப்பாட்டங்களை அடுத்து நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகவே படையினர் வரவழைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜேவிபியின் எதிர்ப்பு பேரணி, இன்று மொரட்டுவையில் இருந்து கொழும்பை வந்தடையவுள்ளது.

மேலும் காலிமுகத்திடலில் தொடர்ந்தும் அரசாங்கத்துக்கு எதிரான போராட்டம் இன்று 9வது நாளாக இடம்பெறுகிறமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply