சடுதியாக அதிகரிக்கும் தங்கத்தின் விலை.

0

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை சடுதியாக அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் அதிலும் குறிப்பாக கடந்த 10 நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருகிறது.

அத்துடன் கடந்த 10-ந் தேதி 1 பவுன் தங்கம் ரூ. 39,352-க்கு விற்கப்பட்டது.

11-ந் தேதி 39,568ஆக உயர்ந்தது. 12-ந் தேதி பவுனுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.39,567ஆக விற்றது. அதன்பிறகு 13-ந் தேதி ரூ.39,968ஆக உயர்ந்தது.

கடந்த 24-ந் தேதி தமிழ் புத்தாண்டு அன்று தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை கடந்தது. அன்று 1 பவுன் தங்கம் ரூ.40,096-க்கு விற்றது. மறுநாள் 15-ந் தேதி பவுனுக்கு 8 ரூபாய் குறைந்து ரூ.40,088 ஆக விற்பனையானது. கடந்த 16-ந் தேதி மீண்டும் உயர்ந்து ரூ.40,112-க்கு விற்கப்பட்டது. நேற்று அதே விலையில் நீடித்தது.

இந்த நிலையில் தங்கம் இன்று பவுனுக்கு ரூ.264 அதிகரித்துள்ளது.

இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.40,376ஆக விலை உயர்ந்து விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.33 அதிகரித்துள்ளது. இன்று 1 கிராம் தங்கம் ரூ.5047-க்கு விற்கப்படுகிறது.

வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது.

மேலும் கிராமுக்கு ரு.1 அதிகரித்து ரூ.75.20-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.75,200-க்கு விற்கப்படுகிறது.

Leave a Reply