புதிய அமைச்சரவை பதவியேற்பு தொடர்பில் வெளியான தகவல்.

0

புதிய அமைச்சரவை அமைச்சர்களின் பதவிப் பிரமாண நிகழ்வு இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது.

இந்நிலையில் குறித்த நிகழ்வில் புதிய அமைச்சர்கள் 17 பேர் பதவியேற்றனர்.

இதன் பிரகாரம் தினேஷ் குணவர்தன பொதுச்சேவைகள், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சராகவும்,

டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில் அமைச்சராகவும்,

ரமேஷ் பத்திரண கல்வி மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராகவும்,

பிரசன்ன ரணதுங்க பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராகவும்,

திலும் அமுனுகம போக்குவரத்து மற்றும் கைத்தொழில் அமைச்சராகவும்,

கனக்க ஹேரத் பெருந்தெருக்கள் அமைச்சராகவும்,

விதுர விக்ரமநாயக்க தொழில் அமைச்சராகவும்,

ஜானக வாக்கும்புர விவசாய மற்றும் நீர்ப்பாசனத் துறை அமைச்சராகவும்,

செஹான் சேமசிங்க வர்த்தக மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி வங்கி அமைச்சராகவும்,

மொஹான் பிரியதர்ஷன டி சில்வா நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சராகவும் ,

விமலவீர திசாநாயக்க வன ஜீவராசிகள் மற்றும் வன வள பாதுகாப்பு அமைச்சராகவும்,

தேனுக விதானகமகே இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் ,

பேராசிரியர் சன்ன ஜயசுமன சுகாதார அமைச்சராகவும்,

ஹாஃ பீஸ் நசீர் சுற்றாடல் அமைச்சராகவும்,

மேலும் பிரமித்த பண்டார தென்னக்கோன் துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சராகவும் சத்திய பிரமாணம் செய்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply