புதிய அமைச்சரவை பதவியேற்பு.

0

புதிய அமைச்சரவை இன்று முற்பகல் பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த புதிய அமைச்சரவையில் 20 அமைச்சர்கள் மாத்திரமே உள்ளடக்கப்படும்.

அத்துடன் கடந்த மூன்றாம் திகதி முன்னாள் அமைச்சர்கள் தங்களது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

இதன் பின்னர் நாடாளுமன்றம் மற்றும் அத்தியாவசிய அரசு சேவைகளை முன்னெடுத்துச் செல்வதாக ஜனாதிபதியினால் 4 அமைச்சர்கள் மாத்திரமே நியமிக்கப்பட்டிருந்தனர்.

மேலும் கடந்த சில தினங்களாக முன்னாள் அமைச்சர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் தொடர்ச்சியான சந்திப்புக்கள் இடம்பெற்று வருகின்றது.

இருப்பினும் புதிய அமைச்சரவையில் தமக்கு எந்தவித அமைச்சுப் பொறுப்புக்களையும் வழங்கவேண்டுமென ஆளும் கட்சியின் பல சிரேஷ்ட உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply