அலி சப்ரியின் இராஜினாமா கடிதத்தினை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இதுவரையில் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்நிலையில் நான்கு பேர் கொண்ட புதிய அமைச்சரவை கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டது.
இதன்போது அலி சப்ரி நிதியமைச்சராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டார்.
இருப்பினும் பதவியேற்று 24 மணித்தியாலங்களுக்குள்ளேயே தனது பதவியினை இராஜினாமா செய்வதாக அலி சப்ரி அறிவித்திருந்தார்.
மேலும் , தேவை ஏற்படின் தனது தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இராஜினாமா செய்ய தயாராகவுள்ளதாகவும் அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்திருந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.



