பூஜை அறையில் நீங்கள் அமர்ந்து கொள்ளுங்கள். உங்களுடைய வலது கையில் சிறிதளவு அறுகம்புல், 1 ரூபாய் நாணயம் இரண்டையும் ஒன்றாக வைத்து இருக்க மூடிக் கொள்ளுங்கள்.
விநாயகரை மனதார நினைத்துக்கொண்டு உங்கள் வாழ்வில் எல்லா வளமும் எல்லா நலமும் ஐஸ்வர்யமும் ஆரோக்கியமும் ஊற்றெடுத்து பெருகிக் கொண்டே செல்ல வேண்டுமென்று மனதார வேண்டிக்கொள்ளுங்கள்.
எதிர்மறையாக எந்த வேண்டுதலையும் வைக்க வேண்டாம். ‘எனக்கு இவ்வளவு கஷ்டங்கள் உள்ளது. நிறைய கடன் உள்ளது.
அதை எப்படி சமாளிக்கப் போகிறேனோ’ என்று வருத்தப்படாதீர்கள்.
மனநிறைவோடு சந்தோஷமாக வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு வாழ்க்கையில் வளர்ச்சிக்கு என்ன தேவையோ அனைத்தையும் அந்த விநாயகரிடம் கேளுங்கள்.
கையில் அருகம்புல்லையும் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து வேண்டுதலின் முடித்துவிட்டு ‘ஓம் ஸ்ரீ மஹா செல்வ கணபதியே போற்றி’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து விட்டு அதன் பின்பு உங்கள் கையில் இருக்கும் அறுகம்புல்லை விநாயகரின் படத்தின் முன்பு விநாயகரின் பாதங்களில் வைத்து விடுங்கள்.
இறுதியாக தீப தூப ஆராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.
முடிந்தால் இந்த பூஜையை முடித்துவிட்டு அந்த ஒரு ரூபாய் நாணயத்தை கொண்டுபோய் விநாயகர் கோவில் உண்டியலில் போட்டு விடலாம்.
முடியாதவர்கள் நீங்கள் எப்போது கோவிலுக்கு செல்கிறீர்கள் அப்போது அந்த ஒரு ரூபாய் நாணயத்தை விநாயகர் உண்டியலில் போடுங்கள்.
சங்கடஹர சதுர்த்தி அன்று கையில் அறுகம்புல்லை வைத்துக்கொண்டு நீங்கள் என்ன வரத்தை கேட்டாலும் அந்த வரத்தை விநாயகப் பெருமான் மனநிறைவோடு சந்தோஷத்தோடு உடனடியாக உங்களுக்கு அள்ளிக் கொடுத்து விடுவார் என்பது நம்பிக்கை.
நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பாருங்களேன்.
அந்த செல்வகணபதி உங்களுக்கான செல்வத்தை கொடுத்துக் கொண்டே இருப்பான் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.இன்று வளர்பிறை சதுர்த்தி. உங்கள் கையில் இந்த ஒரு பொருளை வைத்துக்கொண்டு விநாயகரிடம் எந்த வரம் கேட்டாலும் அது உடனே கிடைக்கும்.
