நாட்டை வந்தடைந்துள்ள எரிவாயு தாங்கிய கப்பலில் உள்ள எரிவாயுவினை தரையிறக்கம் பணிகள் இன்றிரவு இடம்பெறவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் 3,500 மெட்ரிக் டன் தாங்கிய கப்பல் நேற்றைய தினம் இரவு நாட்டை வந்தடைந்தது.
இதற்கமைய நாட்டை வந்தடைந்த எரிவாயுவினை விரைவில் நாடு முழுவதிலும் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும் தற்போது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிவாயு, எரிபொருள் மற்றும் ஏனைய பொருட்களின் தரம் தொடர்பில் ஆராயுமாறு சில சிவில் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.



