ரத்த கறையுடன் விஜய்.

0

விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கியிருக்கும் படம் தான் பீஸ்ட்.

மாஸ்டர் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிக்கும் இப்படத்தின் மீது பெரிய எதிர்ப்பார்ப்பு கூடியுள்ளது.

இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வந்தது.

இப்படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்கள் வெளியாகி அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்தது.

இந்நிலையில் சட்டையில் ரத்த கறையுடன் கையில் துப்பாக்கி வைத்திருக்கும் புகைப்படமும், கோடாரியுடன் இருக்கும் விஜய் புகைப்படமும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த புகைப்படங்கள் பீஸ்ட் படத்தின் டெஸ்ட் ஷூட்டில் எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

Leave a Reply