சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகளை எண்ணைய் உற்பத்தி நிலையங்கள் நிர்ணயம் செய்கின்றன.
இதற்கமைய நாடு பூராகவும் கொவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மார்ச் இறுதியில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.
இருப்பினும் மே மாதம் வரையில் பெட்ரோல், டீசல் விலைகளில் எந்தவிதமான மாற்றமும் இடம்பெறவில்லை.
ஆனால் தற்போது பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் அவற்றின் விலையை உயர்த்தி வருகிறது.
தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது.
இதற்கிடையே, தீபாவளி பண்டிகையையொட்டி பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக மத்திய அரசு அறிவித்தது.
137 நாட்களுக்கு பின் இன்று பெட்ரோல், டீசல் மற்றும் வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் இன்று (புதன்கிழமை) 2-வது நாளாக பெட்ரோல்-டீசல் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.91 காசுகளுக்கு விற்பனையாகிறது.
டீசல் விலையில் லிட்டருக்கு 76 காசுகள் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.92.95 காசுகளாக அதிகரித்து உள்ளது. தொடர்ந்து 2-வது நாளாக பெட்ரோல-டீசல் விலை உயர்ந்து இருப்பதால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்து உள்ளனர்.
சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை தொடர்ந்து ஏறுமுகத்திலேயே உள்ளது. அதுபோல டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பிலும் பெரிய அளவில் மாற்றம் இல்லை.
இந்தியாவின் எரிபொருள் தேவையில் 85 சதவீதம் இறக்குமதி மூலமே நிவர்த்தி செய்யப்பட்டு வருவதால் பெட்ரோல்-டீசல் விலை அடுத்து வரும் நாட்களிலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது 2 நாட்களாக விலை உயர்வு அதிகரிக்கப்பட்டாலும் இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு இன்னமும் ஒரு லிட்டருக்கு ரூ.18 முதல் ரூ.20 வரை இழப்பு ஏற்படும் நிலைதான் உள்ளது.
எனவே பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து உயர்த்தப்படுவது தவிர்க்க முடியாதது என்று எண்ணை நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எனவே வரும் நாட்களில் பெட்ரோல்-டீசலுக்கு கூடுதலாக பணம் செல வழிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்பது உறுதியாகி இருக்கிறது.



