அரச தலைவர் தலைமையில் இன்று இடம்பெறவுள்ள முக்கிய கலந்துரையாடல்கள்.

0

ஆளும் கூட்டணியின் இரு முக்கிய கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.

இந்நிலையில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஆளும் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

குறித்த சந்திப்பு இன்று மாலை 6 மணியளவில் அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது.

மேலும் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சினை குறித்து இதன் போது கவனம் செலுத்தப்படவுள்ளது.

அவ்வாறு ஜனாதிபதியுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலுக்கு முன்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மற்றுமொறு கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

மேலும் குறித்த கலந்துரையாடல் நாடாளுமன்ற வளாகத்தில் 11.30 அளவில் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply