பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட மிகுந்த எச்சரிக்கை.

0

இலங்கையில் தற்போது பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில்,மறுபுறம் கறுப்பு சந்தை வியாபாரமும் உருவாகி வருவதாக பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் புலனாய்வு பிரிவினர் அவதானம் செலுத்த வேண்டும் என்று அகில இலங்கை சிற்றுண்டிசாலை உரிமையாளர் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை அதிகரிப்பதற்கு முன்னரே உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால்மாவின் விலையை 150 ரூபாவால் அதிகரித்துள்ளதாகவும், சமையல் எரிவாயுவை 5000 ரூபாவிற்கு விற்பனை செய்யும் கறுப்பு சந்தைகளும் உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆகவே இது குறித்து பொது மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply