நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக சில பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் சந்தையில் முகக் கவசங்களுக்கான விலை 30 சதவீத்தினால் அதிகரிக்க படுவதாக இலங்கை முகக்கவசம் உற்பத்தியாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் முகக் கவசங்கள் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை பெற்றுக் கொள்வதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதன் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் டொலரின் பெறுமதி எதிர்பாராத வகையில் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



