திருவண்ணாமலையில் பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம்.

0

தமிழகத்தில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது.

இங்கு மலையையே சிவனாக வழிபடுவதால் பவுர்ணமி நாட்களில் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் மலை சுற்றும் பாதையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

நாட்டில் நிலவும் கொவிட் ஊரடங்கு காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டு வந்தது.

தற்போது கொரோனா பரவல் முற்றிலும் குறைந்ததையடுத்து அனைத்து கட்டுப்பாடுகளும் விலக்கிக்கொள்ளப்பட்டன.

இந்த நிலையில் இந்த மாதத்திற்கான பவுர்ணமியன்று பக்தர்கள் கிரிவலம் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.

இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று மதியம் 2.10 மணிக்கு தொடங்கி இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணிக்கு நிறைவடைகிறது

மாலை சுமார் 5 மணிக்கு மேலிருந்து பக்தர்களின் வருகை அதிகரிக்க தொடங்கியது.

மேலும் பக்தர்களின் பாதுகாப்பை கருதி போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

23 மாதங்களுக்கு பிறகு கிரிவலத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதால் திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் பூண்டது போன்று காட்சி அளித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply