காவல்துறை ஊடக பேச்சாளர் விடுத்த எச்சரிக்கை.

0

நாட்டில் தற்போது நிலவும் நிலைமைக்கு மத்தியில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக வெளியாகும் தகவல்களில் எந்தவிதமான உண்மையும் இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், பொதுமக்கள் கொள்ளை சம்பவங்கள் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக சிலர் பொய்யான பிரச்சாரங்களை முன்வைத்து வருகின்றனர்.

இருப்பினும் சிறப்பு அங்காடிகளையும், வீடுகளையும் உடைத்து பொருட்களை கொள்ளையிடும் சம்பவங்கள் சில பிரதேசங்களில் பதிவாகியுள்ளன.

மேலும் பல்வேறு வகையான குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடுமையான சட்டத்தை நடைமுறைப்படுத்த காவல்துறை நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply