ஷொப்பிங் பைகள் மற்றும் லஞ்ச் சீற்களின் விலை அதிகரிப்பு.

0

மூலப்பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் மூலப்பொருட்களின் விலை அதிகரித்து வருகின்றது.

இதன்பிரகாரம் ஷொப்பிங் பைகள் மற்றும் லஞ்ச் சீற்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பொலித்தீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மறுசுழற்சியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஒரு ரூபாவுக்கு விற்கப்பட்ட ஷொப்பிங் பையின் மொத்த விலை 2 ரூபாவாகவும் 5 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஷொப்பிங் பையின் விலை 9 ரூபாவாகவும் 10 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஷொப்பிங் பையின் விலை 17 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.

மேலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த லஞ்ச் சீற்றின் விலை 2.50 ரூபாவிலிருந்து 3.50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply