இலங்கையில் சுற்றுலாப் பயணிகள் ட்ரோன் கமராக்களை பயன்படுத்த இணையத்தில் அனுமதி பெற முடியும் என சிவில் விமான சேவைகள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சுற்றுலாப் பயணிகள் தங்களின் ட்ரோன் கமராவை பயன்படுத்த https://portal.caa.lk/drone/apply-now/report.php என்ற இணையத்தளத்திற்கு சென்று முன்பதிவு செய்யவேண்டும்.
மேலும் இலங்கையில் அனுமதியின்றி ட்ரோன் கமராவை பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



