சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள எச்சரிக்கை.

0

தமிழகத்தின் சில மாவட்டங்களில் எதிர்வரும் 16 ஆம் திகதிக்கு முன்னர் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய தேனி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவித்தல் விடுக்கப்படுள்ளது.

அத்துடன் தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,

16.03.2022 அன்று தேனி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

17.03.2022 அன்று தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் 18.03.2022 அன்று நீலகிரி, தேனி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Leave a Reply