மசகு எண்ணெய் விலை 30 சதவீதத்தால் அதிகரிப்பு.

0

உலக சந்தையில் தற்போது மசகு எண்ணெய்யின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் யுக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்து வருகின்றது.

இதன் பிரகாரம் பிரென்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 109 டொலர் 30 சதமாகவும் , அமெரிக்க WIT எண்ணைய் பீப்பாய் ஒன்றின் விலை 107 டாலர் 40 சதமாகவும் உள்ளது.

மேலும் மேற்கத்திய நாடுகள் எரிபொருள் இறக்குமதி இடைநிறுத்தியுள்ளது.

இதன் பிரகாரம் ரஷ்யாவின் மசகு எண்ணெய் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் பெப்ரவரி 24ஆம் திகதியிலிருந்து மசகு எண்ணெய் விலை 30 சதவீதம் அதிகரித்ததுடன், உச்சபட்சமாக அதன் விலை 130 டொலர்கள் வரை உயர்ந்துள்ளது.

Leave a Reply