கடந்த ஒரு வருடத்தில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 32,375 ஆக இருப்பதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அத்துடன் 2022 ஜனவரியில் இருந்து 29,514 இந்திய சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்தில் இருந்து 20,744 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அதேசமயம் இந்த ஆண்டு மொத்தம் 204,345 வெளிநாட்டவர்கள் நாட்டுக்கு வந்துள்ளனர், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் 178,834 பேர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
மேலும் மார்ச் மாதத்தின் முதல் ஏழு நாட்களில் 25,511 வெளிநாட்டு பிரஜைகள் இலங்கைக்கு வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.



