நாட்டில் காலையிலும் மாலையிலும் மாத்திரமே பாடசாலை மாணவர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களைக் கருத்திற் கொண்டு பேருந்து சேவைகள் இடம்பெறும்.
இந்நிலையில் இன்று மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பேருந்துசேவைகள் இடம்பெறும் இரவில் பேருந்து சேவைகள் இடம்பெறாது.
அத்துடன் இரவில் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடாது, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக 25 வீதமான தனியார் பேருந்துகளே தற்போது சேவையில் ஈடுபட்டுள்ளன.
நாளாந்த சேவைக்கு டீசல் பெற்றுக் கொள்வதில் பாரிய சிரமங்களை இலங்கை போக்குவரத்துச் சபை பேருந்துகளும் எதிர்கொண்டுள்ளன.
மேலும் அத்துடன் கொழும்பு மற்றும் யாழ்ப்பாண டிப்போக்களில் இருந்தே எங்களால் எரிபொருளை பெறமுடிகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.



