60 % சிற்றுண்டி சாலைகள் பூட்டு.

0

நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

இதன்பிரகாரம் நாட்டின் பிரதான நகரங்களிலுள்ள 60 சதவீதமான சிற்றுண்டிச் சாலைகள் மூடப்பட்டுள்ளது.

இதற்கமைய கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் மாத்திரம் சுமார் 1,500 சிற்றுண்டிச் சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணத்தால் அரச வைத்தியசாலைகளில் உள்ள சிற்றுண்டிச் சாலைகளை இன்றைய தினம் முதல் மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் மின்சார பிரச்சனை காரணத்தால் குளிர்சாதன பெட்டிகளில் வைக்கப்பட வேண்டிய உணவுகளிளும் பாதிப்பு ஏற்படுகிறது.

இதன் பிரகாரம் தமது தொழில் துறையில் பாரிய பொருளாதார இன்னல்களை எதிர்நோக்கியுள்ளனர்.

Leave a Reply