நாடாளாவிய ரீதியில்
சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று இரண்டாவது நாளாகவும் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதற்கமைய சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டதினை சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ளனர்.
தாதியர்கள், வைத்திய ஆய்வு கூட நிபுணர்கள், மருந்தாளர்கள் மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் நாளாந்த சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் மக்கள் மருந்துகளை பெற்றுக்கொள்ள பாரிய சிரமத்துக்கு முகம்கொடுத்தனர்.



