தரம் 10, 11, 12-ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த அட்டவணையை சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.
அத்துடன் தேர்வுகள் முடிந்தபிறகு 2022-2023 பள்ளி கல்வி ஆண்டுக்காக 1 முதல் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான வழக்கமான வகுப்புகள் 13.6.22 முதல் தொடங்கும்.
11-ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் 24.6.2022 முதல் தொடங்க உள்ளது.
பிளஸ்-1 வகுப்புகளுக்கு ரிவிஷன் டெஸ்ட் இப்போது முதல் பொதுத்தேர்வு வரை நடைபெறும்.
தேர்வுக்காக மாணவர்கள் மகிழ்ச்சியாக படிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். மன நிறைவோடு தேர்வுகளை எழுத வேண்டும் என்றும் கூறி உள்ளார்.



