நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் குறிப்பாக கடந்த இரண்டு வாரங்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களில் அதிகமானவை என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த கொள்ளைச் சம்பவங்கள் அனைத்தும் மின்சாரம் துண்டிக்கப்பட்டபோது இடம்பெற்றவை என காவற்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மின்சாரம் துண்டிக்கப்படும்போது பல இடங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கெமராக்கள் செயலிழப்பதும் திருட்டு அதிகரிக்க காரணம் எனவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.



