இன்றைய மின்வெட்டு குறித்து வெளியான தகவல்.

0

தற்போது நாட்டில் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இன்றைய தினமும் 5 மணித்தியாலத்துக்கும் அதிகமான மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய ஏ பி சி ஆகிய வலயங்களுக்கு 4 மணித்தியாலங்களும் 40 நிமிடங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும்.

இந்த வலயங்களில் 8:30 முதல் 4:30 வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலங்கள் 40 நிமிடங்களும் மின் துண்டிக்கப்படும்.

அத்துடன் மின் துண்டிப்பு நிகழ்ச்சியான மணித்தியாலங்கள் மாலை 4.30 முதல் 10:30 வரையான காலப்பகுதியில் அமுல்படுத்தப்படும்.

அவ்வாறு P, Q, R, S, T, U, V, W ஆசிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதியில் 5 மணித்தியாலமும் 15
நிமிடங்களும் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும்.

குறித்த பகுதிகளில் 8:30 முதல் மாலை 4.45 வரையான காலப்பகுதியில் 2 மணித்தியாலங்களும் 45 நிமிடங்கள் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும்.

மேலும் மின் துண்டிப்பு 2 மணித்தியாலங்களும் 45 நிமிடங்கள், மாலை 4.45 முதல் இரவு 9.45 வரையான காலப்பகுதியில் அமுல்படுத்தப்படவுள்ளதாக பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னநாயக்க தெரிவித்துள்ளார்.

Leave a Reply