எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானம்.

0

எரிபொருட்களின் விலையை அதிகரிப்பதற்கு ஐஓசி நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, அனைத்து வகையான டீசல் லீட்டர் ஒன்றுக்கு 15 ரூபாவும், பெட்ரோல் லீட்டர் ஒன்றுக்கு 20 ரூபாவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, பெற்றோல் 92-ஒக்டேனின் புதிய விலை 204 ரூபாவாக இருக்கும், டீசலின் புதிய விலை 139 ரூபாவாக இருக்கும்.

ஐஓசி நிறுவனம் இந்த மாதத்துக்குள் மேற்கொள்ளும் இரண்டாவது எரிபொருள் விலை திருத்தம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply