நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ ஜெனீவாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
இந்நிலையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யும் நோக்கிலே இவரது விஜயம் அமைந்துள்ளது.
அத்துடன் நீதிமன்றை அவமரியாதை செய்த குற்றச்சாட்டின் பேரில் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நான்கரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்து கொள்ளும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, எதிர்வரும் 28ம் திகதி ஜெனீவாவிற்கு விஜயம் செய்ய உள்ளார்.
மேலும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் ரஞ்சன் தொடர்பில் முறைப்பாடு ஒன்றை ஹரீன் செய்யவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது



