பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும்.

0

புதிய முறைமை நடைமுறை படுத்தும் வரையில் பழைய முறையில் கீழ் மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும் என தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பான தெரிவுக் குழுவில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் அனைத்து தேர்தல்களும் தொகுதிவாரி முறைமையின் கீழ் 60 சதவீதமும் மற்றும் விகிதாசார முறைமையின் கீழ் 40 சதவீதமும் இணைந்த கலப்பு தேர்தல் முறைமைக்கு அமைய நடத்தப்பட வேண்டும் எனவும் , புதிய முறைமை கொண்டுவரப்படும் வரையில், பழைய முறைப்படியே தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

மேலும் அனைத்து தேர்தல்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25% ஆக இருக்க பரிந்துரைப்பது மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்தை கட்டாயம் ஆகுதல் என்ற முன்மொழிவை க்கு இதன் போதும் கொள்கையளவில் இணக்கம் காணப்பட்டது.

Leave a Reply