நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட 41,000 மெட்ரிக் டன் டீசல் நாடளாவிய ரீதியில் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அண்மையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட ஒக்டோன் 92 ரக மற்றும் 95 ரக பெட்ரோல் விநியோகமும் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நாளொன்றில் 5000 மெட்ரிக் டன் டீசலும்,4000 மெட்ரிக் டன் பெற்றோலும் நாட்டிற்கு அவசியமாகும்.
இந்நிலையில் நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



