சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்கு இலங்கை தயாராக இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கும் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை அரசாங்கம் கடந்த காலங்களில் பல தடவைகள் கோரி இருக்கின்றது.
இதற்கமைய குறித்த விடயத்தில் அரசாங்கம் தயாராக இருக்கின்றது.
மேலும் ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட அனைத்து உதவி வழங்கும் நிறுவனங்களுடனும் அரசாங்கம் தொடர்பில் இருக்கின்றது என அவர் கூறியுள்ளார்.



