இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதற்கமைய குறித்த விபத்து சம்பவம் கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண்ணும் அவரது தந்தையும் பேருந்துக்காக காத்திருந்த போது வேகக்கட்டுப்பாட்டை இழந்த பாரவூர்தி ஒன்று அவர்கள் மீது மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன் பின் அந்தப் பெண் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அத்துடன் காயமடைந்த குறித்த பெண்ணின் தந்தையார் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



