பிக்கு ஒருவரின் மோசமான செயல்! – 13 வயது சிறுமிக்கு ஏற்பட்ட நிலை
வட்டவளை – ரொசெல்ல பகுதியில் உள்ள விகாரை ஒன்றின் பிக்கு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதே பகுதியில் உள்ள 13 வயதுடைய சிறுமி ஒருவரை விகாரையில் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகத்தின் மத்தியில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் சிறுமியின் தந்தை வட்டவளை காவற்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
விகாரையின் பிரதமகுருவால் தான் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக மாணவி தனது தந்தையிடம் கூறியதையடுத்து தந்தை வட்டவளை காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சிறுமி டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் விசேட நீதி வைத்திய அதிகாரி முன்னிலையில் முன்னிலைப்படுத்தி வைத்திய அறிக்கை பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.
மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்ட பிக்குவை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக வட்டவளை காவற்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.



