நிதியமைச்சினால் எரிபொருளுக்கு வரிச்சலுகை வழங்கப்படாவிட்டால் மீண்டும் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என வலு சப்பி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நாடு அன்னிய செலவாணி பிரச்சனையால் நிதி நெருக்கடியை சந்தித்துள்ளது
குறிப்பாக எரிபொருள் கொள்வனவின் போது, அரசாங்கத்தினால் வரிச் சலுகை வழங்கப்பட வேண்டும்.
மேலும் அதிக விலைக்கு கொள்வனவு செய்து , குறைந்த விலையிலேயே நாட்டில் எரிபொருள் விநியோகித்து வருகின்றோம்.
இதன் பிரகாரம் மீண்டும் எரிபொருள் கொள்வனவுக்கான நிதி கையிருப்பில் இல்லாது போகும்.
ஆகவே அரசாங்கம் வரிச்சலுகை வழங்காவிட்டால் எதிர்காலத்தில் ஒரு லிட்டர் டீசல் 52 ரூபாவாலும், ஒரு லிட்டர் பெற்றோல் 19 ரூபாவாலும் அதிகரிக்கப்படும் என வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.



