வட மாகாணத்தில் பரவி வரும் நோய் தொற்று.

0

வட மாகாணத்தில் மலேரியா நோய்த் தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது .

இந்நிலையில் நான்கு வார காலத்திற்குள் 4 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஒரு நோயாளரை அடையாளம் காண்பதன் மூலம் அது ஆயிரம் நோயாளர்களின் ஆரம்பமாக அமையும் என்று சுகாதார அமைச்சின் மலேரியா நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.

இதன்படி இந்த நான்கு நோயாளர்களும் யாழ்ப்பாண மாவட்டத்தில் பதிவாகியிருப்பதாக அவர் கூறினார்.

மேலும் குறித்த நோய் பரவும் அபாயம் இருப்பதாக குறிப்பிட்ட அவர், ஏனைய மாவட்டங்களில் இந்த நோய் பரவும் அனர்த்த நிலை இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

மேலும் இந்த அனர்த்த நிலையில் இருந்து யாழ்ப்பணத்தை மீட்டெடுப்பதற்காக மலேரியா ஒழிப்பு குழு, சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் அந்த மாகாணத்தின் வைத்தியசாலை பணிப்பாளர்கள் பாரிய அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர் என அவர் கூறினார்.

Leave a Reply