அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 5000 ரூபாய் கொடுப்பனவு இதுவரையில் வழங்கப்படவில்லை – பகீர் குற்றச்சாட்டு.

0

அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட 5000 ரூபாய் கொடுப்பனவு இதுவரையில் வழங்கப்படவில்லை என்பதுடன் எனவும் 23 வருடமாக எந்தவித ஓய்வூதிய அதிகரிப்புமின்றி இருப்பதாகவும் பல்கலைக்கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து அரச ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர் ஆகியோருக்கு 5000 ரூபாய் கொடுப்பனவு அதிகரிப்பு ஜனவரி மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அரசாங்க பல்கலைக்கழகங்களில் கல்வி சார் மற்றும் கல்வி சாரா ஊழியர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு அரசாங்கத்தின் 5000 ரூபாய் கொடுப்பனவு இதுவரை வழங்கப்படவில்லை என பலர் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply